🎇 வடக்கம்பட்டி பட்டாசுகளும்..... வடக்கம்பட்டி பிரியாணித் திருவிழாவும்! பாகம் 1
🎆பட்டாசுகள் என்றாலே நமக்கு தீபாவளி தான் நினைவுக்கு வரும். இதையே தீபாவளி என்றாலே பட்டாசுகளே நினைவுக்கு வரும் என்றும் கூறலாம். ஆனால் பட்டாசுகளை உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் சீனர்களே. இன்று உலக அளவில் பட்டாசுகளின் விற்பனை மதிப்பு சில பில்லியன் டாலர்கள் என்றால் அதில் 40% க்கும் மேற்பட்ட உற்பத்தி சீனாவில் இருந்து பெறப்படுகிறது. அது மட்டுமல்ல, சீனாவின் பட்டாசுகள் மிகச் சிறப்பு மிக்கதாகவும், அதே நேரம் விலை மலிவான முறையிலும்கூட கிடைக்கிறது. சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டால் நமது ஊர் பட்டாசுகள் விற்பனை பாதிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளதாக பட்டாசு வணிகர்களே கூறுகின்றனர். 📜2000 ஆண்டுகளுக்கு முன்னரே பட்டாசுக்கான அடிப்படை சீனாவில் தோன்றி விட்டது. ஆம் சீனர்கள் உணவிற்காக பயன்படுத்தப்பட்ட சில உப்புக்கள் நேரடியாக நெருப்பின் மீது பட்டவுடன் வெடிப்பது மினுமினுப்பது என்று நிகழ்வதை யாதார்த்தமாகவே உணர்ந்தார்கள். இந்த யதார்த்த நிகழ்வே இன்று பட்டாசு தொழிலாக உலகம் முழுவதும் பரவி மக்க...
